குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

" இணையில்லா தமிழ் இணையமெங்கும் பரவ வகை செய்வோம்."

 

எம் வாசல் வந்த வாசகர்களிற்கு வணக்கங்கள் !

                  இவ் இணையம்-2003ம் ஆண்டில் ஒரு இலவச இணையமுகவரி ஊடாக ஆரம்பிக்கப்பட்டு, 2005ம்-ஆண்டில் இணைய விரிவாக்கத்தின் பின் குரும்பசிட்டிவெப்.கொம் என்ற இணையவலை முகவரியின் ஊடாக உங்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பங்குனி-2009 ஆண்டில் இணையத்தின் விரைவான பதிவேற்றம் நன்மைகருதி சிறிய மாற்றங்களுடன் இன்றுவரை கிராமம் தொடர்பான தகவல்களை தன்னகத்தே கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.

              எங்கள்கிராமம், நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழலின் காரணத்தால் கிராமத்தவர்கள் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் எல்லாத்திசைகளிற்கும் சிதறுண்டு அயல் கிராமங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்துவருகின்ற போதும், நாங்கள் பிறந்து நடைபயின்று வாழ்ந்த கிராமத்தின் பெயரும்,அதன் நினைவுகளும் அனைவர் மனங்களில் இருந்தும் அகன்றோ அன்றி மறைக்கப்பட்டோ விடக்கூடாது என்பதற்காக இவ் இணையம் கிராமத்திற்காக உருவாக்கப்பட்டது.

               இங்கு இவ் இணையத்தின் பதிவு பக்கங்களை கிராமத்தின்வரலாறு.... , கிராமம் தொடர்பான புகைப்படங்கள்... , கிராமத்தின் ஆலயங்கள்... , பாடசாலைகள்... , கிராமத்தின் வரைபடம்... , மரண அறிவித்தல்கள்..., கிராமத்தின் புகழ்காத்த பெரியார்கள்.... தற்காலத்தின் எம்மவர் நிகழ்வுகள் போன்ற விபரங்களுடன் மேலும் பல பயன்தரு தகவல்களும் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளன.

             தொடர்ந்தும் எமக்கு கிராமம் தொடர்பான தகவல்கள்  கிடைக்கும் போது இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

 

::  நன்றி ::

 KURUMBASIDDYWEB.COM